News August 24, 2025
அஜித்துக்கு அழைப்பு விடுக்கிறார் விஜய்..

அரசியலில் நுழைந்துள்ள விஜய்க்கு ‘ஜனநாயகன்’தான் கடைசி திரைப்படம். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது சினிமா பயணத்தின் கடைசி திரைப்படம் என்பதால், இசை வெளியீட்டு விழாவிற்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், அஜித், சூர்யா உள்ளிட்டோரை அழைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News March 25, 2026
தக்காளி விலை மளமளவென குறைந்தது

வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை மளமளவென குறைந்து வருகிறது. குறிப்பாக, 1 கிலோ தக்காளி ₹6 – ₹8-க்கு கொள்முதல் செய்யப்படுவதால், சில்லறை கடைகளில் கிலோ ₹10 – ₹12-க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேநேரம் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக, மகாராஷ்டிராவில் 1 கிலோ தக்காளி ₹4-க்கு கொள்முதல் செய்யப்படுவதால், விரக்தியில் விவசாயிகள் தக்காளியை சாலைகளில் கொட்டுகினனர்.
News March 25, 2026
நாய்கள் இரவில் ஊளையிட இதுதான் காரணமா?

பொதுவாக நாய்கள் இரவில் ஊளையிட்டால், ’அது பேயை பார்த்து குரைக்கிறது’என்று சொல்வார்கள். இது நிஜமென்று பலர் நம்பினாலும், உண்மையில் இது மூடநம்பிக்கைதான். அறிவியல் ஆராய்ச்சிகளின்படி, பேய் இருப்பதும் உறுதியாகவில்லை; அது நாய்களின் கண்களுக்கு தெரிவதும் உறுதியாகவில்லை. துணை இல்லாமல் தனிமையில் தவிக்கும் நாய்களின் உளவியல் வெளிப்பாடே இத்தகைய ஊளையிடுதலுக்கு காரணம் என அறிவியலாளர்கள் சொல்கின்றனர்.
News March 25, 2026
BREAKING: பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு

NDA கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அன்புமணி வெளியிட்டுள்ளார். கீழ்வேளூர் – வடிவேல் ராவணன், அம்பத்தூர் – KN சேகர், செஞ்சி – கணேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர வேட்பாளர்கள் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>


