News August 24, 2025
விஜய், அஜித் போலவே SK: முருகதாஸ் புகழாரம்

விஜய், அஜித் இருவரும் அவர்களது ஆரம்ப காலங்களில் புதுமுக இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றி, அவர்களுக்கு வாய்ப்பளித்ததாக AR முருகதாஸ் தெரிவித்துள்ளார். அதேபோலவே சிவகார்த்திகேயனும் ஆரம்பத்தில் புதுமுக இயக்குநர்களுடன் கைகோர்ப்பதில் சிறந்து விளங்கியதாகவும், அதுவே அவரின் தற்போதைய வளர்ச்சிக்கு காரணம் என்றும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். SK வளர்ச்சி பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News March 20, 2026
மதுரை: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

மதுரை கோ.புதுரை சேர்ந்த பாஸ்கரன் மகன் மணிகண்டன் (எ) பூனை மணி (22). இவர் பெண்களுக்கு துன்பம் விளைவித்தல், காயம் ஏற்படுத்துதல், வழிப்பறி ஆகிய வழக்குகளில் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இவருடைய சட்டவிரோதமான நடவடிக்கை தொடரவே அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
News March 20, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <
News March 20, 2026
BREAKING: திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறார்

தவாக, திமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளது. 4 நாள்களுக்கு முன்னர் திமுக தலைமைக்கு, வேல்முருகன் வைத்த தேர்தல் வாக்குறுதிகள், கூடுதல் சீட்டுகள் தொடர்பான <<19389138>>கோரிக்கைகளில்<<>> உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், 100 தொகுதிகளில் தவாக வேட்பாளர்களை தனித்து களமிறக்க வேல்முருகன் முடிவு எடுத்துள்ளார். அதேநேரம், இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.


