News August 24, 2025
3-வது முறையாக திருப்பி அனுப்பப்பட்ட மசோதா: மா.சு.

‘அண்ணா’ பெயரில் சித்த மருத்துவ பல்கலை அமைப்பதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, 2 நாள்களுக்கு முன்பும் 3-வது முறையாக கவர்னர் திருப்பி அனுப்பியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அவர் கேட்டுள்ள 4 திருத்தங்கள் தீர்க்கப்பட்டு, சட்டப்பேரவையில் முன்மொழியப்படும் என்றும் கூறியுள்ளார். நெல்லையில் பேசிய அவர், விரைவில் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
OTP பெறாமல் ஆன்லைன் சேவைகளே கிடையாது: HC

மத்திய, மாநில & தனியார் நிறுவனங்கள் பல்வேறு சேவைகளுக்காக OTP பெறுவது தனியுரிமை விதிகளுக்கு முரணானது என கூறி, OTP-க்கு தடை விதிக்க மதுரை HC-ல் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட், இன்றைய காலகட்டத்தில் OTP பெறாமல் எந்த ஒரு ஆன்லைன் சேவையும் நடைபெறாது என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது. முன்னதாக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற DMK முன்னெடுப்பில் OTP பெறுவதற்கு HC தடை விதித்தது.
News August 27, 2025
மீண்டும் அதிமுகவில் இணைய முடியாது.. EPS அதிரடி முடிவு

பாஜக கூட்டணியிலிருந்து விலகிய <<17528723>>OPS<<>>, நிபந்தனையின்றி அதிமுகவில் இணைய தயார் கூறியதற்கு, ‘இணைக்க மாட்டோம்’ என்று கடந்த வாரம் EPS திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்நிலையில், நேற்று ஒன்றிணைய வேண்டும் என EPS-க்கு மீண்டும் அழைப்பு விடுத்தார். இதுகுறித்து மூத்த தலைவர்கள் EPS-யிடம் ஆலோசிக்கையில், அவரை நீக்கியது நீக்கியதுதான், மீண்டும் இணைப்பு குறித்து பேச வேண்டாம் என EPS முற்றுப்புள்ளி வைத்துவிட்டாராம்.
News August 27, 2025
ஜெயிலர் 2-ல் இணைந்த SJ சூர்யா

நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ பட ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இந்நிலையில், இதில் SJ சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கவுள்ளதாம். தற்போது ‘Killer’ படத்தின் முதற்கட்ட ஷூட்டிங்கை SJ நிறைவு செய்துள்ளாராம். ஏற்கெனவே, இப்படத்தில் ஃபஹத் ஃபாசில், ‘வீர தீர சூரன்’ படத்தில் மிரட்டியிருந்த சுராஜ் ஆகியோரும் இணைந்துள்ளனர். ஜெயிலர் 2 மிரட்டுமா?