News August 24, 2025
சற்றுமுன்: இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் இவர்தான்

இந்தியாவிலேயே பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் சந்திரபாபு நாயுடு முதலிடம் பிடித்துள்ளார். சந்திரபாபு நாயுடு தொடங்கிய பால் நிறுவனம் தற்போது ₹931 கோடி சொத்து மதிப்பை கொண்டுள்ளது. 2024-ல் உச்சபட்சமாக அவரின் பால் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ₹6,755 கோடியை எட்டியது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) வெளியிட்டுள்ள பணக்கார முதல்வர் பட்டியலில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடைசி இடத்தில் உள்ளார்.
Similar News
News August 27, 2025
மீண்டும் அதிமுகவில் இணைய முடியாது.. EPS அதிரடி முடிவு

பாஜக கூட்டணியிலிருந்து விலகிய <<17528723>>OPS<<>>, நிபந்தனையின்றி அதிமுகவில் இணைய தயார் கூறியதற்கு, ‘இணைக்க மாட்டோம்’ என்று கடந்த வாரம் EPS திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்நிலையில், நேற்று ஒன்றிணைய வேண்டும் என EPS-க்கு மீண்டும் அழைப்பு விடுத்தார். இதுகுறித்து மூத்த தலைவர்கள் EPS-யிடம் ஆலோசிக்கையில், அவரை நீக்கியது நீக்கியதுதான், மீண்டும் இணைப்பு குறித்து பேச வேண்டாம் என EPS முற்றுப்புள்ளி வைத்துவிட்டாராம்.
News August 27, 2025
ஜெயிலர் 2-ல் இணைந்த SJ சூர்யா

நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ பட ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இந்நிலையில், இதில் SJ சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கவுள்ளதாம். தற்போது ‘Killer’ படத்தின் முதற்கட்ட ஷூட்டிங்கை SJ நிறைவு செய்துள்ளாராம். ஏற்கெனவே, இப்படத்தில் ஃபஹத் ஃபாசில், ‘வீர தீர சூரன்’ படத்தில் மிரட்டியிருந்த சுராஜ் ஆகியோரும் இணைந்துள்ளனர். ஜெயிலர் 2 மிரட்டுமா?
News August 27, 2025
Health Tips: நாக்கில் இந்த அறிகுறிகள் இருக்கா? கவனம்!

எப்போதாவது நாக்கில் வலி/ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறதா? அப்படி இருந்தால் அது நாக்கு புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். இதனை கண்டறிய இன்னும் சில அறிகுறிகள் இருக்கின்றன. ▶நாக்கில் 2 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் புண்கள் ▶சிவப்பு/வெள்ளை புள்ளிகள் தோன்றுவது ▶விழுங்குவதில்/பேசுவதில் சிரமம் ▶நாக்கில் உணர்ச்சி இல்லாமல் போவது இதன் அறிகுறிகளாக கருதப்படுகின்றன.