News August 24, 2025
2 மாதங்களுக்கு ஒருமுறை விதை பரிசோதனை அவசியம்!

சேலம் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; விவசாயிகள் விதையின் முளைப்புத்திறன், ஈரப்பதம் அறிந்து கொள்ள 2 மாதங்களுக்கு ஒருமுறை விதை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் முடிவுகளின் படி, சில பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ளலாம். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் விதைப் பரிசோதனை நிலையத்தில் ரூ.80 கட்டணத்துடன் விதை பரிசோதனை செய்யலாம்.
Similar News
News August 24, 2025
சார் பதிவாளர், துணை தாசில்தார் மீது மோசடி வழக்கு!

சேலத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் சார் பதிவாளர், துணை தாசில்தார், விஏஓ உள்ளிட்ட 10 பேர் மீது கூட்டுசதி, போலி ஆவணம் தயாரித்து பதிவு செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இடங்கணசாலை அருகேயுள்ள மெய்யனூரைச் சேர்ந்த கோவிந்தன் (73) எஸ்.பி. கௌதம் கோயலிடம் புகார் மனு அளித்திருந்த நிலையில் விசாரணை நடைபெறுகிறது.
News August 24, 2025
சேலம்: தேர்வில்லாமல் ரூ.70,000 சம்பளத்தில் அரசு வேலை!

சேலம் மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 24, 2025
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!

சேலம் மாவட்டம், மல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் படித்த முன்னாள் மாணவர்கள் மாணவியர்கள் சந்திப்பு இன்று பள்ளியில் நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் கேக் வெட்டியும், ஒருவருக் ஒருவர் அன்பை பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட 80 ஆரஞ்சு மிட்டாய்களையும் ஊட்டிவிட்டு அன்பை வெளிப்படுத்தி நினைவுகளைப் பகிர்ந்தனர்.