News August 24, 2025

கரூர்:குழந்தைகளுக்கு மாதம் 2000 அறிவித்தார் கலெக்டர்!

image

பெற்றோரை இழந்த குழந்தைகள் பாதுகாத்திடும் வகையில் அவர்களது பள்ளி படிப்பு வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, 18 வயது வரை மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கல்லூரி கல்வி மற்றும் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தில் பயன் பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவரிடம் விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார். SHARE பண்ணுங்க

Similar News

News April 3, 2026

கரூர்: உங்க வேட்பாளர் சொத்து எவ்வளவு தெரியனுமா?

image

கரூர் மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <>affidavit.eci.gov.in<<>> இணையதளம் மூலம் எளிதாக அறியலாம். இதன் மூலம் வேட்பாளர்களின் கல்வி மற்றும் குற்றப் பின்னணி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். (இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்னுங்க)

News April 3, 2026

கரூர் வரும் எடப்பாடி பழனிச்சாமி

image

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் 18-ம் தேதி கரூரில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்ய உள்ளார்.

News April 3, 2026

கரூர்: திமுகவின் முக்கிய புள்ளி அதிமுகவில் ஐக்கியம்

image

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கரூர் மத்திய பகுதி திமுக செயலாளர் அன்பரசு அதிமுகவில் இணைந்தார். கரூர் மாநகராட்சி மண்டல குழு தலைவரான இவர், மாவட்டச் செயலாளர் விஜயபாஸ்கர் தலைமையில் திமுகவிலிருந்து விலகினார். தேர்தல் நெருங்கும் சூழலில், திமுகவின் முக்கிய நிர்வாகி மாற்றுக் கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!