News August 24, 2025
அரியலூர்: செய்வினை எடுப்பதாக ரூ.12 லட்சம் மோசடி

வாலாஜா நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (38). கடந்த 2022-ம் ஆண்டு இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சிலர், விஜயகுமார் மீது செய்வினை வைக்கப்பட்டுள்ளதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதையடுத்து புகாரின் பேரில் தர்மராஜ் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனை விசாரித்த இவ்வழக்கை விசாரித்த அரியலூர் நீதிமன்றம் தர்மராஜுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
Similar News
News August 24, 2025
அரியலூர்: விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் விழா ஏற்பாட்டாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்ச்செல்வன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் ரகுபதி, ரவிச்சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டாளர்கள் அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
News August 24, 2025
அரியலூர்: அரசு துறையில் வேலை..தேர்வு இல்லை

அரியலூர் மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலை பெற வாய்ப்பு! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 24, 2025
அரியலூர்: டிஎஸ்பி தலைமையில் பேச்சுவார்த்தை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விருத்தாசலம் சாலையில் உள்ள, அரசு மயான புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க வேண்டும் என்று, ஜெயங்கொண்டம் சுன்னத் ஜமாத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக டிஎஸ்பி ரகுபதி மற்றும் தாசில்தார் சம்பத் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.