News August 24, 2025
பேரிடர் மீட்பு பயிற்சி பெற்றோரை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி

கூடலூர் காந்திதிடலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற இளைஞர் அணி தொண்டர்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மாவட்டத்தலைவர் வாப்பு தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் வி.கே.அனீபா தொகுத்து வழங்கினார். இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கைச்சேர்ந்தோர் திரளாக கலந்து கொண்டனர்.
Similar News
News March 14, 2026
நீலகிரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<
News March 14, 2026
கூடலூர்: மர்ம விலங்கு தாக்கி பசு மாடு பலி

கூடலூர் செறுமுள்ளி கிராமம் சர்க்கார் மூலை பகுதியில், வாப்புட்டி என்பவருக்குச் சொந்தமான 4 வயது பசு மாடு கடந்த இரண்டு நாட்களாகக் காணாமல் போனது. இந்நிலையில், நேற்று (13.03.2026) மாலை மர்ம விலங்கு கடித்த நிலையில் அந்தப் பசுவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 13, 2026
நீலகிரி: 8th போதும்., அரசு வேலை ரெடி! NO EXAM

நீலகிரி மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <


