News April 8, 2024
திருச்சி அருகே அகோரிகள் ஆட்டம்

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இன்று சிவனடியார் அகோரிகள் தலையில் சிவ லிங்கத்தை சுமந்து நடனம் ஆடிக்கொண்டு சிறப்பு வேண்டுதலில் ஈடுபட்டனர். மேலும் 30க்கும் மேற்பட்ட ருத்ராட்சம் மாலைகளை கழுத்தில் அணிந்து பக்தர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கினர்.
Similar News
News February 19, 2026
திருச்சி: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு, வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில், ஒரு தேர்வு மையத்தில், 125 தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 9 மணிக்குள் வர வேண்டும். செல்போன், ப்ளூடூத் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை தேர்வரைக்குள் எடுத்து வரக்கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News February 19, 2026
திருச்சி – சார்லப்பள்ளி ரயில் சேவை நீட்டிப்பு

திருச்சி – சார்லப்பள்ளி சிறப்பு ரயில் சேவை கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சார்லப்பள்ளி – திருச்சி ரயில் சேவை 03.03.26 முதல் 31.03.26 வரையிலும், மறுமார்க்கத்தில் திருச்சி – சார்லப்பள்ளி ரயில் சேவை 04.03.26 முதல் 01.04.26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 19, 2026
திருச்சி: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <


