News August 24, 2025
மதுரை சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த தேவாங்கு

மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தில் உள்ள கேசம்பட்டி, சேக்கிபட்டி, கம்பூர், குன்னாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேவாங்குகள் வசித்து வருகின்றன. தேவாங்கு சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவ்வாறு உள்ள சூழலில் சாலை விபத்துகளில் இவை அடிக்கடி சிக்கி உயிரிழந்து வருகிறது. இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News March 22, 2026
ஆசிரியர்கள் வசிக்கும் தொகுதியில் தேர்தல் பணி வழங்க எதிர்பார்ப்பு

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பிய மனு: சட்டப்பேரவை தேர்தலில் வாக்குச்சாவடியில் ஆசிரியர்கள் பணியாற்ற அந்த தொகுதி வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியிலேயே தேர்தல் பணி வழங்க வேண்டும், அவர்கள் வாக்குச் சாவடி மையங்களுக்கு சென்று வரும் வகையில் போக்குவரத்து வசதி உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
News March 22, 2026
மதுரை: கொடியேற்றத்துடன் நாளை திருவிழா துவக்கம்!

அருள்மிகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனிப் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
15 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத் திருவிழாவின் உச்ச நிகழ்வாக பிரம்மாண்ட தேரோட்டம் ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும்.
News March 22, 2026
மதுரை: நெருங்கும் தேர்தல்; உடனே செக் பண்ணுங்க!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தகுதி வாய்ந்த அனைத்துக் குடிமக்களும் <


