News August 24, 2025

திருச்சி: ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

image

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இன்று தீவிர நாச வேலை தடுப்பு சோதனை நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்பநாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடைமைகள், நடைமேடைகள், ரயில் நிலைய கேண்டீன், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

Similar News

News March 18, 2026

பல்க் ஆர்டர் குறித்து தகவல் தெரிவிக்க கலெக்டர் உத்தரவு

image

தேர்தல் காலமான தற்போது, ஓட்டல்களில் மொத்த ஆர்டர்கள் மற்றும் மொத்தமாக டோக்கன்கள் ஏதேனும் வந்தால், அதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான வகையில் யாரேனும் தங்கும் விடுதிகளுக்கு வந்தால் அதுகுறித்தும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News March 18, 2026

திருச்சி: தேர்தல் அலுவலர்கள் தொலைபேசி எண் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- ஶ்ரீரங்கம் – 9445461797,
கிழக்கு – 9600535464, மேற்கு – 9445000455, மணப்பாறை – 9445477835, திருவெறும்பூர் – 9445000277, லால்குடி – 9445000456, மண்ணச்சநல்லூர் – 9445074602, முசிறி – 9445000457, துறையூர்-9385251283. இத்தகவலை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

News March 18, 2026

திருச்சி – காரைக்குடி தினசரி ரயில் சேவை அறிவிப்பு

image

திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலை, தினசரி சேவையாக வழங்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் திருச்சி – காரைக்குடி பயணிகள் ரயில் சேவை வரும் 21-ம் தேதி முதல் தினசரி ரயில் சேவையாக மாற்றப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் வரும் 22-ம் தேதி முதல் தினசரி சேவையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!