News August 24, 2025

நெல்லைக்கு விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மைசூரு – நெல்லை இடையே ஆக.26, 27 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மைசூரில் இருந்து ஆக.26 இரவு 8:15 மணிக்குப் புறப்படும் ரயில், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக ஆக. 27 காலை 10:50 மணிக்கு நெல்லையை சென்றடையும். மறுமார்க்கத்தில், நெல்லையில் இருந்து ஆக.27 பிற்பகல் 3:40 மணிக்குப் புறப்படும் ரயில், ஆக. 28 காலை 5:50 மணிக்கு மைசூரை சென்றடையும். *ஷேர்

Similar News

News August 24, 2025

நெல்லை: நம்ம ஊரு கலெக்டரை அழைக்கலாம்!

image

நெல்லை மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை எளிதில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளார். 97865 66111 என்ற எண்ணில் வாட்ஸாப் (அ) கால் செய்தோ தங்கள் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தெரிவித்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0462-2501222. இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News August 24, 2025

திருநெல்வேலிக்கு கனிமொழி MP வருகை

image

நேற்று (22/08/2025) திருநெல்வேலிக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி கருணாநிதி MP வருகை தந்துள்ளார். திருநெல்வேலிக்கு வருகை தந்த அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மா.சுப்பிரமணியம் அவர்களை சந்திக்க வருகை தந்துள்ளார். நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் VSR.ஜெகதீஷ் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

News August 24, 2025

உழவர் சந்தை அங்காடி ஏலம் அறிவிப்பு

image

மகாராஜநகர் மற்றும் மேலப்பாளையம் உழவர் சந்தைகளில் உள்ள சிறப்பு அங்காடிகளை இயக்குவதற்கு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களிடமிருந்து மூடி முத்திரையிடப்பட்ட ஏலம் 03.09.2025 அன்று பிற்பகல் 3 மணிக்கு விடப்பட உள்ளது . திருநெல்வேலி விற்பனைக் குழு அலுவலகத்தில் அதே நாள் பிற்பகல் 3.30 மணிக்கு மாவட்ட கண்காணிப்புக்குழு தலைமையில் நடைபெறும்.

error: Content is protected !!