News August 23, 2025
உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு இவ்வளவா..!

ADMK, BJP என மாறி மாறி திமுக மீதும் உதயநிதி மீதும் ஊழல் புகார்களை கூறி வருகின்றன. இந்நிலையில், உதயநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற பேச்சு எழுந்துள்ளது. 2021 தேர்தலில் ECI-ல் அவர் அளித்த <
Similar News
News August 24, 2025
உடலை சுத்தமாக்கும் ‘துளசி தேநீர்’

ஆயுர்வேதத்தில் ஆன்மாவை தூய்மைப்படுத்தும் மூலிகையாக சொல்லப்படும் ‘துளசி’ உடலின் நச்சுகளை நீக்கக் கூடியது. மேலும், இருமல், மூச்சுப் பிரச்னை உள்ளவர்களுக்கு நிவாரணம் தரும். நன்கு கொதித்த நீரை உலர்ந்த துளசி இலைகள் மீது ஊற்றி, 20-30 நிமிடங்கள் ஊறவிடவும். பின் சூடாக அருந்தலாம். ஒரு நாளைக்கு 3 கப் அருந்தலாம். இதனுடன் இஞ்சி (அ) ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக்கொள்ளலாம். SHARE IT!
News August 24, 2025
திமுக மாநாட்டை விஞ்சிய தவெக மாநாடு?

தமிழக அரசியலில் பிரபலமாக பேசப்படுவது திருச்சி திமுக மாநாடு தான். ஆனால், அதையே விஞ்சும் அளவுக்கு பிரமாண்ட கூட்டத்தை மதுரை மாநாட்டில் விஜய் கூட்டி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மாநாட்டில் அதிகளவில் பங்கேற்றது இளைஞர்கள் தான். இளைஞர்களின் இந்த எழுச்சியை விஜய் சரியாக பயன்படுத்தி, விரைவிலேயே மக்கள் சந்திப்பை நடத்த வேண்டும். அது நடந்தால், 2026 தேர்தல் களம் எளிதாக இருக்காது என கூறுகின்றனர்.
News August 24, 2025
Asian Shooting Games: தங்கத்தை அள்ளும் தமிழக சிங்கப்பெண்!

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் 2-வது தங்கத்தை வென்றுள்ளார்.
கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அர்ஜூன் பாபுதா & இளவேனில் வாலறிவன் ஜோடி சீன ஜோடியை 17-11 என தோற்கடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர். கஜகஸ்தானில் நடைபெற்று வரும் தொடரில் ஏற்கெனவே, தனிநபர் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.