News August 23, 2025
பதவி பறிப்பு மசோதா குறித்து நாராயணசாமி கருத்து

புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி; நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பதவி பறிப்பு சட்ட மசோதா நடைமுறைக்கு பொருந்தாது. எதிர்கட்சிகளை மிரட்டும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது. கடந்த தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு தான் மோடி அரசு பதவிக்கு வந்தது. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
Similar News
News August 24, 2025
புதுவையில் நாளை மின்தடை

புதுவை மரப்பாலம் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நாளை ஆக.24ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் முத்தியால்பேட்டை, கிருஷ்ணா நகர், எழில் நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், குருசுகுப்பம், வைத்திக்குப்பம், ஒயிட் டவுன், டவுன் புல்வார்டு, கோவிந்த சாலை, பெரிய மார்க்கெட், பிருந்தாவனம், சாந்தி நகர் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9.30 முதல் மதியம் 1.30 மணி மின்தடை ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 24, 2025
புதுவை பாகூரில் சோலார் திட்ட விழிப்புணர்வு முகாம்

புதுச்சேரி மின்துறை & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையுடன் இணைந்து, பிரதம மந்திரி சூரிய ஒளி மின் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு சோலார் பேனல் மின்சார திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் பாகூர் தனியார் நிலையத்தில் நேற்று நடந்தது. முகாமில், மின்துறை செயற்பொறியாளர்கள் (சோலார் பிரிவு) செந்தில்குமார், செயற்பொறியாளர் (தெற்கு) கிருஷ்ணசாமி, உதவி பொறியாளர்கள் ஆகியோர் இத்திட்டம் பற்றி விளக்கினர்
News August 23, 2025
புதுச்சேரி: தீர்ப்பளித்த நீதிபதிகளின் விவரம்

புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் இதற்கு முன்பும் தற்போதும் பணியாற்றிய நீதிபதிகளின் விவரங்களை புதுச்சேரி மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த <