News August 23, 2025
விஜய்யின் அடுத்த அதிரடி.. திமுக, அதிமுக கலக்கம்

அதிகமான தொண்டர்கள் கூடிய அரசியல் மாநாடு, <<17494428>>தவெகவின் மதுரை மாநாடுதான்<<>> என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தனது அடுத்த நகர்வுக்கு தயாராகி வருகிறார் விஜய். விக்கிரவாண்டி, மதுரையை தொடர்ந்து தவெகவின் அடுத்த மாநாடு கோவையில் நடைபெற உள்ளதாம். இது கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் அதிமுகவுக்கும், கொங்குவை கைப்பற்ற துடிக்கும் திமுகவுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News March 16, 2026
தவெகவினரால் மன உளைச்சல்: ஜூலி

விஜய் கூறிய குட்டிக் கதை குறித்து கருத்து தெரிவித்த ஜூலியை SM-ல் தவெகவினர் தொடர்ச்சியாக திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தவெக நிர்வாகி உள்பட 8 பேர் மீது ஜூலி புகாரளித்துள்ளார். அதில், தனக்கு கிட்னி மோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளதாக தவெகவினர் வீடியோ வெளியிட்டதால், மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
News March 16, 2026
NDA-தவெக கூட்டணி? காத்திருக்கும் பாஜக

NDA-தவெக இடையே பேச்சுவார்த்தை நடக்கவில்லை என இருதரப்புமே அதிகாரப்பூர்வமாக மறுத்துவிட்டனர். ஆனாலும், கூட்டணிக்கு விஜய் வந்தால் வெற்றி உறுதி என கருதும் பாஜக, தொடர் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மார்ச் 30-ல் வேட்புமனு தாக்கல் தொடங்குவதால், அதற்குள் எப்படியாவது விஜய்யை தங்கள் பக்கம் இழுத்துவிட வேண்டும் என பாஜக காய் நகர்த்துகிறதாம்.
News March 16, 2026
கடன் தள்ளுபடி.. அரசு வெளியிட்ட தகவல்

கடந்த 11 ஆண்டுகளில் ₹9.75 கோடி வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, அதிகபட்சமாக 2020 நிதியாண்டில் ₹1.59 லட்சம் கோடியும், குறைந்தபட்சமாக 2025 நிதியாண்டில் ₹47,568 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டது என்றார். 2025 நிதியாண்டு முதல் வாராக்கடன் தள்ளுபடி தொகை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


