News August 23, 2025
சென்னை: வரலாற்றில் இன்று L.I.C. கட்டிடம்

இந்தியாவின் முதல் உயரமான கட்டிடமாக சென்னையின் புகழ்பெற்ற L.I.C. கட்டிடம் ஆகஸ்ட் 23, 1959 அன்று திறக்கப்பட்டது. 1953-ல் கட்டுமானப்பணி துவங்கி 1959-ல் நிறைவடைந்த இக்கட்டிடம் சுமார் 177 அடி உயரம், 14 மாடிகள் கொண்டது. அன்றைய காலத் திரைப்படங்களில் இதன் அபூர்வமான வடிவம் பெரும் கவனத்தை பெற்றது. சென்னை வந்தவர்கள் அனைவரும் இதைப் பார்க்காமல் செல்ல முடியாது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 17, 2026
சென்னை: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

சென்னை மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க
News March 17, 2026
சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னையில் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணி நாளையுடன்(மார்ச் 18) நிறைவு பெறுகிறது. மைக்ரோ சிப் பொருத்தாத மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் உள்ள 22,875 மாடுகளில் 900 மாடுகளுக்கு மட்டுமே மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளன என்றும் சாலைகளில் நடமாடுவதால் மாடுகளுக்கு சிப் பொருத்துவது கட்டாயம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News March 17, 2026
சென்னை ஒன் செயலியில் புதிய மாற்றம்!

’சென்னை ஒன்’ செயலியில் உள்ள மாதாந்திர பயண அட்டையில், பயணிக்கும் பேருந்தின் எண்ணைப் பதிவிடுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறை பயணத்தின் போதும், பேருந்தின் எண்ணைப் பதிவிடுவது சிரமமாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், இனி அந்த செயலியில் உள்ள மாதாந்திர பேருந்து அட்டையை நடத்துநரிடம் காண்பித்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


