News August 23, 2025
போத்தனூா் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் சேவை நாளை ரத்து

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் பராமரிப்பு பணி காரணமாக ஆக.24 ஆம் தேதி காலை 9.40 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூா் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல அன்றைய தினம், மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் – போத்தனூா் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அதில் அறிவித்துள்ளது.
Similar News
News August 23, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (23.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 23, 2025
கோவையில் இலவச டெய்லர் பயிற்சி

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச டெய்லர் பயிற்சி விரைவில் வழங்கப்படவுள்ளது. 40 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், டெய்லரிங் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, <
News August 23, 2025
கோவைக்கு நாளை வருகிறார் அமைச்சர் கே.என்.நேரு.!

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை (24.08.2025) கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு காந்திபுரம் செம்மொழிப் பூங்கா பணிகளை ஆய்வு செய்து, 11.35 மணிக்கு உக்கடம் பேருந்து நிலையத்தில் ரூ.21.55 கோடி மதிப்பில் புதுப்பிப்பு பணிகளைத் தொடங்குகிறார் என திமுக மா. செயலாளர் நா. கார்த்திக் தெரிவித்துள்ளார்.