News August 23, 2025

BREAKING: ரேபிஸ் நோய்க்கு சேலத்தில் இருவர் பலி!

image

சேலம்: ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்த தர்மன் (35). இவருடைய வீட்டில் வளர்த்து வந்த நாய் இவரை கடித்துள்ளது. இதனை அடுத்து முறையாக சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று இன்று உயிரிழந்தார். ரேபீஸ் நோய் தாக்கியதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதே போல் கடந்த சில நாள்களுக்கு முன் ரேபீஸ் நோய் தாக்கி கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 23, 2025

தொழிற்சாலை விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்!

image

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே பதிவு பெற்ற தொழிற்சாலைகள், புதியதாகப் பதிவு செய்யும் தொழிற்சாலைகள் https://dish.tn.gov.in என்ற மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் வரும் ஆக.30ஆம் தேதிக்குள் தொழிற்சாலைகளின் முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். தொழிற்சாலைகள் முறையாகப் பதிவு செய்து பயன்பெறலாம்.

News August 23, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.23) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

News August 23, 2025

நரம்புத்தளர்ச்சியை குணமாக்கும் சேலம் கோயில்!

image

சேலம் மாவட்டம், சேலத்தில் பிரசித்தி பெற்ற அழகிரிநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு, திருமண தோஷம் உள்ளவர்கள் ஆண்டாள் திருக்கல்யாணத்தை கண்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. புத்திர பாக்கியம் வேண்டி பொன்ன மரத்தின் அடியிலுள்ள சந்தான கோபாலகிருஷ்ணரை பிரார்த்தனை செய்கின்றனர். இத்தல இறைவனை வேண்டிக்கொள்ள நரம்புத்தளர்ச்சி நோய்கள் நீங்குமாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!