News August 23, 2025
விழுப்புரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணியில் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய பொறியாளர்களிடம் கலந்தாய்வு நடைபெற்றது இதில் துறை அதிகாரிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்
Similar News
News August 24, 2025
விழுப்புரம் காவல்துறை சார்பில் பதிவு

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பதிவு பதிவிடப்பட்டுள்ளது. அதில், இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் தலைகவசம் அணிவோம் பாதுகாப்பை உறுதி செய்வோம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பதிவு பதிவிடப்பட்டுள்ளது.
News August 24, 2025
விழுப்புரம் வழியாக செல்லும் ரயில் நீட்டிப்பு

திருச்சியிலிருந்து புறப்படும் திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் வ.எண் 06190 செப்டம்பர் 2ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை விழுப்புரம் வழியாக செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நின்று செல்லும், மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து திருச்சி செல்லும் சிறப்பு ரெயில் (06191), வரும் செப்டம்பர் 2ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News August 23, 2025
விழுப்புரத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

விழுப்புரம் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? வீட்டு ஓனர் ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸாக பெற வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!