News August 23, 2025
ECR சாலையில் மீனவர்கள் சாலை மறியல்

காலாப்பட்டில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றாத இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் புதுச்சேரி – சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News March 18, 2026
புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் எச்சரிக்கை

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்து, வேட்பு மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளதாக பொதுச்செயலாளர் ஜெயபால் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் நிபந்தனைகளை பாஜக ஏற்கவில்லை என்றால், தவெகவுடன் கூட்டணி அமைத்து, அந்த கட்சிக்கு 10 இடங்களை ஒதுக்கி தேர்தலை சந்திக்கத் தயார் என்றும் அவர் கூறினார்.

புதுச்சேரி: திமுக சார்பில் வேட்புமனு தாக்கல்

முதலியார் பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட திமுக வேட்பாளர் சம்பத் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஆதரவாளர்களுடன் தேர்தல் அலுவலகத்துக்கு வந்த அவர், தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார். இதற்கிடையில், காங்கிரஸ்–திமுக கூட்டணி குறித்து இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படாத சூழல் நிலவி வருகிறது. இருக்கை பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.