News August 23, 2025
Missed Call மூலம் PF பேலன்ஸை தெரிந்துகொள்வது எப்படி?

UAN எண் கைவசம் இல்லையா? பிரச்னையே இல்லை, மிஸ்டு கால் மூலமும் பிஎஃப் பேலன்ஸை நீங்கள் அறியலாம். இதற்கு, உங்கள் பிஎஃப் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். ஒரே ரிங்கில் கால் கட் ஆகிவிடும். இதனை அடுத்து உங்களுக்கு ஒரு SMS வரும் அதில் உங்களுடைய பிஎஃப் பேலன்ஸ் விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். SHARE IT.
Similar News
News August 23, 2025
அமித் ஷாவுடன் CP ராதாகிருஷ்ணன் சந்திப்பு

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை NDA துணை ஜனாதிபதி வேட்பாளர் CP ராதாகிருஷ்ணன் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இது பற்றி X தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, CP ராதாகிருஷ்ணன் அனுபவமிக்க தலைவர் எனவும் நிர்வாகத் திறன் கொண்டவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். சிபிஆர் தேச நலனுக்காக அளப்பரிய தொண்டாற்றுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
News August 23, 2025
TVK மீது பாயும் விமர்சனங்கள்.. React செய்த விஜய்

தவெகவின் மதுரை மாநாட்டுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அக்கட்சி தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அளவு பேரன்பு காட்டும் நபர்களை உறவுகளாக பெற என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை என பதிவிட்ட அவர், தவெக மீது வீசப்படும் விமர்சனங்களில் நல்லவற்றை மட்டும் நமதாக்கி உரமேற்றுவோம் எனவும் அல்லவையை புறந்தள்ளி புன்னகைப்போம் எனவும் பதிவிட்டுள்ளார்.
News August 23, 2025
குப்பையையும் விட்டுவைக்காத திமுக அரசு: EPS

நாட்டிலேயே கடன் வாங்குவதில் முதலிடம் தமிழ்நாடு என்ற சாதனையை CM ஸ்டாலின் படைத்துள்ளதாக EPS சாடியுள்ளார். திருவெறும்பூர் பரப்புரையில் பேசிய அவர், அதிமுகவின் அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத்தொகை ₹1,000 வழங்கப்படுகிறது என்றார். மேலும், திமுக ஆட்சியில் DGP முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து நியமனங்களிலும் ஊழல் நடப்பதாகவும், குப்பைக்கு கூட வரி போட்டு மக்களின் பணம் சுரண்டப்படுகிறது எனவும் விமர்சித்தார்.