News April 8, 2024
திண்டுக்கல்: கதிகலங்க வைத்த பாஜக நிர்வாகி

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மகுடீஸ்வரனை தேடி வருகின்றனர். உடனடியாக மகுடீஸ்வரன் பொறுப்பிலிருந்து இருந்து நீக்கி மாவட்ட தலைவர் கனகராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க மாநில தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
Similar News
News July 7, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று, (ஜூலை-07) இரவு 11.00 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். காவல் துறை அட்டவணையை வெளியிட்டு, அவசர உதவிக்கு அட்டவணையில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
News July 7, 2025
திண்டுக்கல்லில் பாவங்கள் போக்கி, வேலை தரும் கோவில்!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் நகரில் காளஹஸ்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலாகும். இங்கு வேண்டினால் ராகு, கேது தோஷம் நீங்கும், செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், இழந்த வேலை மீண்டும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், குழந்தை பாக்கியம் கிடைக்க கிருத்திகை நட்சத்திர நாட்களில் சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். SHARE பண்ணுங்க!
News July 7, 2025
திண்டுக்கல்லில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 29 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<16974590>>தொடர்ச்சி<<>>