News August 23, 2025
இன்று ஒரே நாளில் ₹2,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கம் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. ஒருகிராம் வெள்ளி விலை ₹2 உயர்ந்து ₹130-க்கும் கிலோ வெள்ளி ₹2000 உயர்ந்து ₹1,30,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் ₹1000, நேற்று ₹2000, இன்று ₹2000 என மூன்றே நாளில் ₹5000 அதிகரித்துள்ளது. வெள்ளி நகைகளையும் இனி வங்கிகளில் அடகு வைக்கலாம் என RBI பரிந்துரை அளித்துள்ள நிலையில், வெள்ளி விலை அதிகரித்து வருகிறது.
Similar News
News August 23, 2025
Beauty Tips: இளநரை பிரச்னையா? இதோ தீர்வு!

இளநரை பிரச்னை ஆண்கள், பெண்கள் இருவரையும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குகிறது. இதை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இந்த வழிகள் உதவும்: *அதிகம் Stress ஆகாதீர். *வைட்டமின் B நிறைந்த உணவுகளை தினசரி உட்கொள்ளவும். *கரிசலாங்கண்ணி சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்துவரலாம். *சல்பேட் இல்லாத ஷாம்புகள், அமோனியா, பிபிடி கலக்காத ஹேர்-டை போன்றவற்றை பயன்படுத்தலாம் *வாரம் 3 முறை தலைக்கு குளிக்கவும். SHARE IT!
News August 23, 2025
இந்தியாவின் முதல் Space Station.. இஸ்ரோ அசத்தல்

’பாரதிய அந்தரிக்ஷ் ஸ்டேசன்’ என பெயரிடப்பட்ட இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட Space Station-ன் மாதிரியை ISRO காட்சிபடுத்தியுள்ளது. சீனா மட்டுமே சொந்தமாக விண்வெளி ஆய்வு நிலையத்தை வைத்திருக்கும் நிலையில், இந்தியாவும் அதன் ஆய்வு நிலையத்தை 2028-க்குள் விண்வெளியில் நிறுவ திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் கோள்கள் பற்றிய ஆய்வு, விண்வெளி சுற்றுலா ஆகிவற்றை செய்யமுடியும் என கூறப்படுகிறது.
News August 23, 2025
அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவையை நிறுத்தும் இந்தியா!

புதிய வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 25-ம் தேதி முதல் USA-க்கு தபால் சேவைகளை நிறுத்துவதாக அஞ்சல்துறை அறிவித்துள்ளது. 800 USD வரையிலான பொருள்களுக்கு சுங்க வரி இல்லாமல் இருந்த நிலையில், 50% வரி விதித்து டிரம்ப் அறிவித்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வரும் 25-ம் தேதிக்கு பிறகு முன்பதிவு செய்தவர்கள் தங்களது பொருள்களை திரும்ப பெறவும் அஞ்சல்துறை அறிவுறுத்தியுள்ளது.