News August 23, 2025
திருவள்ளூர்: முருகனுக்கு வினோதமாக வெந்நீர் அபிஷேகம்

திருத்தணி முருகன் கோயில் கருவறை பின்புறம் உள்ள பாலமுருகனுக்கு மார்கழி திருவாதிரையில், வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. மார்கழி மாதம் குளிர்காலம் என்பதால், முருகன் மீது இருக்கும் அன்பின் காரணமாக வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. திருவண்ணாமலைக்கு அடுத்த படியாக இங்கு தான் வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
Similar News
News March 13, 2026
ஆவடி: காவல் ஆணையகரத்தில் காத்திருக்கும் அதிகாரிகள்

திருவள்ளூர்: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்ஸ்பெக்டர்கள், SI-க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகள் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு SI-க்கள், காவலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் 2 முறை பணியிட மாற்றம் கேட்டு விருப்ப மனு அளித்தனர். பணியிட மாற்றம் செய்யப்படும் என காத்திருந்த நிலையில், நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
News March 13, 2026
ஆவடி: ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.40 லட்சம் இழப்பு!

திருவள்ளூர்: ஆவடியைச் சேர்ந்த சுஜாதா நாதன் (50) என்பவர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பி, தனது வங்கி கணக்கில் ரூ.40 லட்சத்து 32 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால், கூறியபடி இரட்டிப்பு தொகை வராததால் தான் ஏமாற்ற பட்டதை உணர்ந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஆவடி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 13, 2026
திருவள்ளூர்: கேஸ் புக் செய்ய முக்கிய எண்கள்

வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும், பதிவு வசதி தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. (SHARE IT)


