News August 23, 2025

விழுப்புரத்தில் ஊர்க்காவல் படை பணியிடங்கள் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்ட கடலோர ஊர்க்காவல் படையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 15 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கோட்டக்குப்பம் உட்கோட்டப் பகுதியில் உள்ள ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 20 முதல் 45 வயதுக்குட்பட்டவராகவும், குற்றச் செயலிலும் ஈடுபடாதவராகவும் இருக்க வேண்டும். ஆக.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News March 12, 2026

விழுப்புரம்: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

image

விழுப்புரம் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 12, 2026

விழுப்புரம: போக்ஸோ வழக்கில் 20 ஆண்டு சிறை

image

விழுப்புரம் மாவட்டம் வி.சாத்தனூரைச் சேர்ந்த குஜன் என்பவர், கடந்த 2021-ல் 16 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் இன்று (மார்ச் 12) தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்ற நீதிபதி வினோதா அதிரடி உத்தரவிட்டார்.

News March 12, 2026

விழுப்புரம்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

விழுப்புரம் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!