News August 23, 2025

திண்டுக்கல்: தகாத உறவால் கணவன் தற்கொலை!

image

திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள தனியார் பங்களாவில் மேற்பார்வையாளராக பணிபுரிந்தவர் ஜான்சன் பாபு(36). இவருக்கும் சசிரேகா என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 6 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், சசிரேகாவிற்கும் மற்றொரு வாலிபருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனால் இந்தத் தம்பதி விவகாரத்திற்கு மனு செய்த நிலையில் நேற்று முந்தினர் ஜான்சன் பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News August 23, 2025

திண்டுக்கல்லில் மின் தடை அறிவிப்பு

image

திண்டுக்கல்: அங்குநகர் துணை மின்நிலையத்தில் வருகிற ஆக.25ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9:00 – மாலை 2:00 மணி வரை, திண்டுக்கல் நகர் முழுவதும், எம்.எம்.கோவிலூர், பாலகிருஷ்ணாபுரம் தாடிக்கொம்பு, செட்டிநாயக்கன்பட்டி, பொன்மாந்துறை, சீலப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 23, 2025

திண்டுக்கல்லில் இலவச வக்கீல் சேவை!

image

திண்டுக்கல் மக்களே.., நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. அதன் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ▶️திண்டுக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0451-2460107 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 23, 2025

திண்டுக்கல்லில் மாபெரும் மாரத்தான் போட்டி

image

திண்டுக்கல்லில் இன்று(ஆக.23) காலை 6 மணிக்கு மாரத்தான் போட்டி தொடங்கியது. டட்லி பள்ளி மைதானம் மற்றும் அங்கு விலாஸ் பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ. 4000, மூன்றாம் பரிசு ரூ.3000, நான்காம் பரிசு ரூ.2000, ஐந்தாம் பரிசு ரூ.1000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

error: Content is protected !!