News August 23, 2025
HealthTips: காலை/இரவு உணவை தவிர்த்தால் எடை குறையுமா?

உடல் எடையை குறைக்க காலை/இரவு உணவை Skip செய்கிறீர்களா? இத்தவறை செய்தால் உங்களால் எப்போதும் எடையை குறைக்க முடியாது என டாக்டர்கள் சொல்கின்றனர். காலை/இரவு உணவை தவிர்ப்பது உங்களது பசியை தூண்டுமாம். இதனால் நீங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக உணவை உட்கொள்ள நேரிடும் என்கின்றனர். இதோடு, கலோரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மெட்டபாலிசமும் குறையுமாம். நீங்க இந்த மாதிரியான Diet இருந்துருக்கீங்களா?
Similar News
News March 12, 2026
வேலூர் : கேஸ் முகவர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோலிய பொருட்கள் இருப்பு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்து. இதில் பேசிய ஆட்சியர் சுப்புலட்சுமி காஸ் சிலிண்டர்கள் பதுக்கல் செய்வதோ அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோ குற்றமாகும். கேஸ் சிலிண்டர்களை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
News March 12, 2026
இனி டெலிகிராமில் புது படங்களை பார்க்க முடியாது..

OTT-க்கு பணமில்லை என்பதால் பெரும்பாலானோர் புது படங்களை டெலிகிராமில் பார்க்கின்றனர். இதனால் தங்களின் வருமானம் பாதிக்கப்படுவதாக கூறி ஜியோ சினிமா, அமேசான் பிரைம் நிறுவனங்கள் புகார் எழுப்பியது. இந்நிலையில், சட்டவிரோதமாக பதிவேற்றப்படும் படங்கள் பதிவேற்றும் 3,100 சேனல்களை 3 மணி நேரத்திற்குள் நீக்க டெலிகிராமுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உங்கள் கருத்து?
News March 12, 2026
தங்கையை ரேப் செய்த அக்காவின் காதலன்

சென்னை, ஓட்டேரியில் 14 வயது பள்ளி மாணவியை, அக்காவின் காதலனே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்காவுக்கும், அவரது காதலனுக்கும் திருமணம் செய்ய இருவீட்டார் சம்மதம் தெரிவித்ததால், அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அண்மையில் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தலைமறைவான இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.


