News August 23, 2025

நாமக்கல்: கல்வி ஒன்றே கடைசி வரை நம்மை காப்பாற்றும்!

image

பாச்சல், ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துர்கா மூர்த்தி தொடக்கி வைத்து, மாணவர்களிடையே உரையாற்றிய ஆட்சியர் கல்வி ஒன்றே கடைசி வரை நம்மை காப்பாற்றும் என்ற ஒரே நோக்கத்துடன் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு முன்வர வேண்டும்” என கூறினார்.

Similar News

News August 23, 2025

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கான வானிலையில் வானம் பெரும்பாலும், மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் நல்ல மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 96.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் வீச வாய்ப்புள்ளது என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 23, 2025

நாமக்கல்: தாட்கோ மூலம் அழகுக்கலை பயிற்சி!

image

நாமக்கல் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு அழகுக்கலை உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியை பெற தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடம் முதல் தளத்தில் இயங்கும் தாட்கோ அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286–291178, 94450-29508 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

News August 23, 2025

நாமக்கல்: மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு

image

நாமக்கல் மாவட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1500 வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ் மொழி திறனை மேம்படுத்தும் நோக்கில் திறனாய்வு தேர்வு அக்டோபர் 11 சனிக்கிழமை அன்று நடைபெறும் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும், 50 சதவீதம் மற்ற தனியார் பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 4 வரை www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!