News April 8, 2024
குறைந்த விலையில் தரமான மதுபானம்

தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் தரமான மதுபானங்களை விற்போம் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்துள்ளார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெறுகிறது. இது தொடர்பான பிரசாரத்தின் போது பேசிய அவர், மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெகன் மோகன் ரெட்டி, அதை செய்யாமல் மதுபானங்களின் விலையை மட்டும் உயர்த்திவிட்டதாக குற்றம்சாட்டினார்.
Similar News
News January 12, 2026
மதுரை: ஊருக்கு கிளம்பியாச்சா.? உங்களுக்கு ஒரு GOOD நியூஸ்..!

பொங்கல் பண்டிகையை கொண்டாட, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். இவ்வாறு ஆம்னி பேருந்துகளில் மதுரைக்கு பயணிக்கும் உங்களிடம், அளவுக்கு அதிகமான கட்டண கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது 9095366394 என்ற எண்ணில், கால் செய்தோ, SMS மூலமாகவோ (அ) Whatsapp மூலம் புகாரளித்தால், உடனடி நடவடிக்கை பாயும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. இந்த நல்ல தகவலை ஷேர் பண்ணுங்க..
News January 12, 2026
பண்டிகை முடிந்து பொங்கல் பரிசு: புதுச்சேரி அரசு

பொங்கல் பண்டிகைக்கு பின் பொங்கல் பரிசுத் தொகை ₹3,000 மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசாக ₹4,000 வழங்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நிதிச்சுமை காரணமாக பொங்கல் பரிசுத்தொகை ₹3,000-ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பண்டிகைக்கு பின் பொங்கல் பரிசு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 12, 2026
கொத்து கொத்தா கொட்டும் முடி ஒரே வாரத்தில் சரியாக TIPS!

வெந்தயம், முருங்கை இலை, கற்றாழையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுவதாக சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். ➤வெந்தய விதைகளை ஊற வையுங்கள் ➤முருங்கை இலைகளை நிழலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும் ➤ இரண்டையும் கற்றாழையை சேர்த்து அரைக்கவும் ➤ அந்த பேஸ்ட்டை தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும் ➤பிறகு வெதுவெதுப்பான நீர் & ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள். பலருக்கு பயனளிக்கும் SHARE THIS.


