News August 23, 2025
சேலம்: மகளிர் உரிமைத்தொகை கேட்டு 75,830 விண்ணப்பம்!

கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் ஆக.21- ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் 65,658 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கலைஞர் உரிமைத்தொகைக் கேட்டு மட்டும் சுமார் 75,830 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 23, 2025
சேலத்தில் நடிகர் கட்டியுள்ள கோயில் எங்கு தெரியுமா?

சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடிகர் சரவணன் ஓமலூர் வட்டம், வட்டக்காடு என்கிற ஊரில் கோயில் கட்டி இருக்கிறார். வெற்றி விநாயகர் என்று பெயர் கொண்ட அந்த கோயிலின் மகா ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, வருகிற 27.08.2025 காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. அதே நாளில் படப்பிடிப்பு தளம், ஒரு ஸ்டுடியோவையும் தொடங்கவுள்ளர். இதனை இயக்குநர் பாண்டிராஜ் ஆக. 27-ம் தேதி இதை திறந்து வைக்கிறார்.
News August 23, 2025
சேலம்: 1,823 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி!

விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற ஆகஸ்ட் 27- ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் 1,823 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இதில் மாநகர் பகுதிகளில் மட்டும் 865 இடங்களில் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
News August 23, 2025
சேலம் வழியாக இயக்கப்படும் 5 ரயில்கள் கோவை செல்லாது!

தண்டவாள மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால் நாளைய (ஆக.24) சேலம் வழியாக இயக்கப்படும் தாம்பரம்-மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (16159), பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (22644), திப்ரூகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (22504), ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352), எர்ணாகுளம்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12678) ஆகிய ரயில்கள் நாளை கோவை செல்லாமல் போத்தனூரில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.