News August 23, 2025
நீலகிரி: வாழை தோட்டத்தை சேதம் செய்த காட்டு யானைகள்!

புளியம்பாறை பகுதி விவசாயிகள், ஓணம் பண்டிகைக்கு முன், வாழை தார்கள் அறுவடை செய்ய உள்ளனர். காட்டு யானைகள், நுழைவதை தடுக்க தோட்டத்தை சுற்றி சோலார் மின்வேலி அமைத்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் முகாமிட்ட காட்டு இரண்டு யானைகள், வாழை மரத்தை ஒன்றை, சோலார் மின் வேலி மீது சாய்த்து, மின் சப்ளை துண்டிக்கப்பட்வுடன், கம்பியை லாவகமாக கடந்து, தோட்டத்தில் நுழைந்து,வாழை மரங்களை சேதம் உட்கொண்டு சென்றுள்ளன.
Similar News
News August 23, 2025
நீலகிரி மாவட்டத்தில் உடனே வேலை!

நீலகிரி மாவட்டம் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் ரசாயன செயல்முறைக்கான பணியாளர் (Chemical Process Worker) என்ற 77 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மாதம் ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். விருப்பம் உள்ள நபர்கள் https://munitionsindia.in/carriers என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News August 23, 2025
குன்னூர் கிளை சிறையில் சமையலர் பணிக்கு ஆள் தேர்வு!

குன்னூர் கிளை சிறையில் காலியாக உள்ள ஒரு சமையலர் பணியிடத்தினை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடம் எஸ்.டி இன சுழற்சியில் நிரப்பப்பட உள்ளது. தகுதியான நபர்கள் சம்பந்தப்பட்ட சான்றிதழ்களின் நகலுடன் சிறை கண்காணிப்பாளர் மத்திய சிறை கோவை 18 என்ற முகவரிக்கு வரும் 01-09-2025 தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 23, 2025
பிளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் உணவு வினியோகிக்கும் உணவகங்களுக்கு விருது வழங்கப்பட உள்ளதால்,வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மற்றும் பொருட்களை பயன்படுத்தும் சிறந்த உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறையால் ஒரு லட்சம் ரூபாயுடன் விருதும், தெருவோர,சிறு வணிகர்கள் 50,000 ரூபாய் விருதும் வழங்கப்பட உள்ளது.