News August 23, 2025

மறந்துடாதீங்க – இன்று வேலைவாய்ப்பு முகாம்

image

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று ( ஆக.23) காலை 8 மணியளவில் கோவை-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் 270-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். பொதுமக்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News August 23, 2025

போத்தனூா் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் சேவை நாளை ரத்து

image

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் பராமரிப்பு பணி காரணமாக ஆக.24 ஆம் தேதி காலை 9.40 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூா் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல அன்றைய தினம், மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் – போத்தனூா் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அதில் அறிவித்துள்ளது.

News August 23, 2025

கேரளா ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம்

image

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஆக.24 ஆம் தேதி ஆலப்புழை – தன்பாத் விரைவு ரயில், எா்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில், திப்ரூகா் – கன்னியாகுமரி விரைவு ரயில், பாட்னா- எா்ணாகுளம் விரைவு ரயில், தாம்பரம் – மங்களூரு விரைவு ரயில் கோவை வழித்தடத்தில் இயக்கப்படாமல் இருகூா் – போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது

News August 23, 2025

கோவை: சிலிண்டர் டெலிவரிக்கு அதிக பணம் கொடுக்கணுமா?

image

கோவை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <>-1 <<>>இந்த இணையதளத்தில் புகார் அளியுங்க. இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

error: Content is protected !!