News August 23, 2025

காசாவில் கடும் உணவு பஞ்சம்: ஐ.நா அறிவிப்பு

image

காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாகவும், இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக காசாவுக்குள் உணவைக் கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவுவதாகவும், ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மறுத்த இஸ்ரேல் அரசு, உணவு பஞ்சம் என்பது ஹமாஸ் அமைப்பால் பரப்பப்பட்ட பொய் என பதிலடி கொடுத்துள்ளது.

Similar News

News March 17, 2026

ராசி பலன்கள் (17.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News March 17, 2026

ஆதவ் அர்ஜுனா பேச்சு அரசியல் நாகரிகமற்றது: EPS

image

ரஜினியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பது ஏற்கத்தக்கதல்ல என EPS கூறியுள்ளார். X தளத்தில் இதுகுறித்த தனது கண்டனத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். அரசியலுக்கு வராத காரணத்தை ரஜினிகாந்த் தெரிவித்துவிட்ட போதிலும், அதை அரசியல் நோக்கத்தோடு அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது அரசியல் நாகரிகமற்ற செயல் என EPS கண்டித்துள்ளார்.

News March 17, 2026

தமிழக தேர்தல்.. புதிய அறிவிப்பு வெளியானது

image

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் உதவி எண்களை ECI அறிவித்துள்ளது. 1950 வாக்காளர் உதவி எண் மற்றும் ‘Book a Call with BLO’ வசதியை பயன்படுத்தி தேர்தல் தொடர்பான குறைகளுக்கு வாக்காளர்கள் தீர்வை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1800-11-1950 என்ற இலவச எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. SHARE THIS

error: Content is protected !!