News August 23, 2025
காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனருக்கு மரியாதை

சீர்காழி காவல் சரகம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு கட்டை பையில் ஒரு கைபேசி மற்றும் ரூ.5,100 பணமும் கிடந்துள்ளது. இதனைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர் காமராஜ் என்பவர் சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காணாமல் போன பொருள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனருக்கு சீர்காழி காவல் நிலையம் சார்பாக சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Similar News
News March 10, 2026
மயிலாடுறையில் நாளை மின்நுகர்வோர் கூட்டம்!

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை(மார்.11) மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டமானது நாகை மின்பரிமான மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மின்நுகர்வோர் கலந்து கொண்டு, தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர்(பொறுப்பு) ரேணுகா தெரிவித்துள்ளார்.
News March 10, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.9) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 9, 2026
மயிலாடுதுறை: 597 மனுக்களை அளித்த பொதுமக்கள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தனித்துணை ஆட்சியர் கீதா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில், மொத்தம் 597 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை தனித்துணை ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலகரிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.


