News August 23, 2025
விஜய்யை பூமர் என கலாய்த்த அண்ணாமலை

‘அங்கிள்’ என ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் பேசியிருப்பது சரியில்லை என்றும், விஜய்யை ‘பூமர்’ மாதிரி பேசுகிறீர்கள் என்று யாராவது சொன்னால் அவரது மனது கஷ்டப்படாதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லையில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணியை வெற்றிப் பெற செய்து, EPS-யை CM ஆக்கும் பொறுப்பு நமக்கு இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.
Similar News
News March 19, 2026
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வர தடை போட்ட ஸ்டாலின்?

ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை தொடர்ந்து அதிமுகவில் சீட் கிடைக்காதோர், மீண்டும் கட்சியில் இணைய முடியாதவர்கள் என பலரும் திமுகவில் இணைய காத்திருக்கிறார்களாம். ஆனால், அதிமுகவை பலம் இழக்க செய்வதன் மூலம் தமிழகத்தில் பாஜக வலுவடைந்து விடும் என்ற கருத்து திமுக மேலிடத்துக்கு சென்றுள்ளது. இதனையடுத்து, அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வர நினைப்போருக்கு தற்போதைக்கு ஸ்டாலின் தடை போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News March 19, 2026
BREAKING: அதிமுக கூட்டணியில் இணைந்தார்

திமுக கூட்டணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுகவும் கூட்டணியை பலப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தலைவர் G.B.பச்சையப்பன், EPS-ஐ சந்தித்து 2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளார். சிகப்பு, மஞ்சள், சிகப்பு நிறத்திலான கொடியை(தவெக) விஜய் பயன்படுத்தக்கூடாது என வழக்குத் தொடுத்தது பச்சையப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 19, 2026
திமுக வைக்கும் டிமாண்ட்.. முரண்டு பிடிக்கும் விசிக!

திமுக கூட்டணியில் 8 தொகுதிகளை ஒதுக்க விசிக, அழுத்தம் கொடுத்து வருகிறது. அதில், குறைந்தது 3 பொதுத் தொகுதிகள் வேண்டும் என திருமாவளவன் அழுத்தமாக கேட்டுள்ளாராம். ஆனால், திமுக தலைமையோ 6 சீட்டுகள்; அதில் 1 பொதுத் தொகுதி, 1 தனித் தொகுதியில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட வேண்டும் என சொன்னதாக தெரிகிறது. அதனை மறுத்த திருமாவளவன் ‘பானை’ சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.


