News August 23, 2025
தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை

திருச்செங்கோடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI) நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேர்க்கைக்கான கடைசி தேதி 31-08-2025 ஆகும்.எனவே, சேர்க்கை பெற விரும்பும் மாணவ மாணவியர் 8/10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 79041-11101/82201-10112 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்
Similar News
News August 23, 2025
தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் போட்டியில் மாணவி அசத்தல்!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 20வயதிற்குட்பட்ட மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் ‘பிரேயர் கோப்பை’ யினை சென்னையில் நடத்தியது. இதில் இறுதிப்போட்டியில் ஆரஞ்சு டிராகன்ஸ் மற்றும் கிரீன் இன்வேடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் ஆரஞ்சு டிராகன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த டிராகன்ஸ் அணியில் நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியின் மாணவி ஶ்ரீநிதி அற்புதமாக விளையாடி சிறந்த ஆல்ரவுண்டருக்கான விருதை பெற்றார்.
News August 23, 2025
நாமக்கல்லில் ஒரு அருமையான வாய்ப்பு!

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 25 நாட்களுக்கு வெள்ளாடு வளர்ப்பு, பால் உற்பத்தி, செம்மறியாடு வளர்ப்பு, ஜப்பானிய காடை, மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் 5 மணி வரை பயிற்சி வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 99430-08802 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான வாய்ப்பை SHARE பண்ணுங்க!
News August 23, 2025
நாமக்கல்: கல்வி ஒன்றே கடைசி வரை நம்மை காப்பாற்றும்!

பாச்சல், ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துர்கா மூர்த்தி தொடக்கி வைத்து, மாணவர்களிடையே உரையாற்றிய ஆட்சியர் கல்வி ஒன்றே கடைசி வரை நம்மை காப்பாற்றும் என்ற ஒரே நோக்கத்துடன் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு முன்வர வேண்டும்” என கூறினார்.