News August 23, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் (22.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!

Similar News

News August 23, 2025

திருவாரூர்: சோழ சாம்ராஜ்யத்தின் மணிமகுடம்!

image

தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என அனைவராலும் அறியப்படும் காவிரி ஆற்றின் டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் திருவாரூர் மாவட்டம், சோழ சாம்ராஜ்யத்தின் 5 பாரம்பரிய தலைநகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருவாரூர் தலைநகரமாகவும், தியாகராஜர் கோயிலின் இருப்பிடமாக இருப்பதால், சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்துள்ளது. இதனால் திருவாரூர் சோழ சாம்ராஜ்யத்தின் மணிமகுடமாக விளங்கியது.

News August 23, 2025

மாவட்ட அளவில் எய்ட்ஸ் வினாடி வினா போட்டி

image

திருவாரூர் மாவட்ட பள்ளி கல்வி துறை மற்றும் எய்ட்ஸ் மாவட்ட கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டிகள் விளமல் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. 26 பள்ளி ரெட்ரிப்பன் கிளப் மாணவர்கள் கலந்து கொண்டதில் திருவாரூர் அரசு உதவி பெறும் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாரா அக்ஷயா அணி முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

News August 22, 2025

திருவாரூர்: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு!

image

திருவாரூர் மக்களே, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 1757 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!