News August 23, 2025
கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என 28 வருடங்களுக்கு மேலாக கும்பகோணம் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே கும்பகோணம் மாநகர அகில பாரத இந்து ஆன்மீக பேரவை சார்பில், கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
Similar News
News April 3, 2026
தஞ்சை மாவட்டத்தில் 28 பேர் வேட்புமனு தாக்கல்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் இரண்டாம் நாளான நேற்று 28 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடக்க நாளான மார்ச் 30ம் தேதி 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை விடுமுறையைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் மாவட்ட முழுவதும் மொத்தம் 28 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
News April 3, 2026
தஞ்சை: காவிரி விவசாயிகள் சங்கத்தினர் திமுக-வுக்கு ஆதரவு

ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக ஆர். வைத்திலிங்கம் போட்டியிட உள்ளார். இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ். பழனியப்பன், அவரை ஒரத்தநாட்டில் சந்தித்து, சங்கத்தின் ஆதரவை தெரிவித்துக் கொண்டார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News April 3, 2026
தஞ்சை: தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் தொலைக்காட்சி மற்றும் ஊடக செய்திகள் கட்டுபாட்டு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில், சட்டமன்ற தேர்தல் பொது பார்வையாளர்கள் திவேஷ் செஹரா, கேஷ்வேந்திர குமார், அருண் குமார், சர்ஜித் கவுர் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


