News August 23, 2025
டாக்டர் உங்கள் நாக்கை செக் பண்ண இதுதான் காரணமா?

உடல்நிலை சரியில்லாமல் டாக்டரிடம் சென்றால், நாக்கை நீட்டச் சொல்வதற்கு இதுதான் காரணம்: *நாக்கு மஞ்சள் நிறமாக தோன்றினால்: வயிறு (அ) கல்லீரல் தொடர்பான நோய். *ரோஸ்: ஆரோக்கியமான உடல். *இளம் சிகப்பு: இதயம் & ரத்தம் சார்ந்த நோய். *சிமெண்ட்: செரிமானம் & மூலநோய். *வெளிர் வெள்ளை: உடல்நீர் வற்றிப் போகுதல் & நுண் கிருமிகளால் தொற்றுக் காய்ச்சல். *நீலம்: சிறுநீரக பாதிப்பு.
Similar News
News August 23, 2025
உங்களிடம் நகை இருந்தால்.. அமைச்சர் கொடுத்த அதிர்ச்சி

காது, கழுத்துல நகை போட்டு இருந்தால் மகளிர் உரிமைத்தொகை கிடையாது என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியது நேற்று முதல் விவாதப்பொருளாக மாறியுள்ளது. உண்மையில் அமைச்சர் சொல்வதுபோல் அப்படி எதுவும் கிடையாது. 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் குடும்பங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும்.
News August 23, 2025
வேண்டியதற்கு கவனம் செலுத்தினாலே போதும்!

கார் ஓட்டும்போது கைப்பேசியில் பேச ஆரம்பித்தால் கார் ஓட்டுவது விபரீதத்தில் முடியும் அல்லவா. அது போலதான் நமது வாழ்வும். சின்ன சின்ன விஷயங்களின் காரணமாக கவனம் சிதறினால், செய்ய நினைக்கும் வேலையில் முழு கவனம் கிடைக்காது. இந்த கவனச்சிதறலில் இருந்து தப்பிக்க, சிம்பிள் டிரிகஸ் ஒன்னு இருக்கு! வேண்டியதற்கு கவனம் செலுத்தினாலே போதும்.. வேண்டாதது அதுவாக தானாகவே விலகிவிடும்.
News August 23, 2025
உதயநிதியை பார்த்து அமித்ஷாவுக்கு பயம்: ஆ.ராசா

ராகுல் பிரதமராகவும், உதயநிதி முதல்வராகவும் ஆக முடியாது என அமித்ஷா நேற்று தெரிவித்திருந்தார். இதுபற்றி அறிக்கை வெளியிட்ட ஆ.ராசா, ஜெய்ஷா எவ்வாறு BCCI செயலாளரானார் என கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் வாக்களித்தால் யார் வேண்டுமென்றாலும் CM ஆகலாம் என்றும், இதே விமர்சனங்கள் கடந்த காலங்களில் ஸ்டாலினுக்கும் வந்ததாகவும், தற்போது உதயநிதியைப் பார்த்து அமித்ஷாவுக்கு பயம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.