News August 22, 2025
BREAKING: இனி ₹2 லட்சம்.. தமிழக அரசு அறிவிப்பு

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான இழப்பீடு தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விபத்து மரணத்திற்கான இழப்பீட்டை ₹1 லட்சத்தில் இருந்து ₹2 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. விபத்தில் உடல் உறுப்பை இழந்தால் இனி ₹1 லட்சம்(முன்பு ₹20 ஆயிரம்) வழங்கப்படும். அதேபோல், இனி இயற்கை மரணத்திற்கு ₹30 ஆயிரமும், இறுதிச் சடங்கு செய்ய ₹10 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News August 23, 2025
ஆகஸ்ட் 23: வரலாற்றில் இன்று

*1956 – திரைப்பட நடிகர் மோகன் பிறந்த தினம்.
*2011 – லிபியா உள்நாட்டுப் போர்: அதிபர் கடாஃபி அப்பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
*1991 – உலகின் முதல் இணையதளம்(WWW) பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டது.
*2023 – சந்திரயான்-3 நிலவின் தென்துருவத்தில் பிரக்யான் ரோவர் உதவியுடன் தரையிறங்கியது.
*அடிமைகள் ஒழிப்பு மற்றும் அதன் வணிகத்தையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்.
News August 23, 2025
RSS-யிடம் விஜய் பாடம் படிக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்

ஒழுக்கமாக மாநாடு நடத்துவது குறித்து இந்து, RSS அமைப்புகளிடமும் விஜய் கற்றுக் கொள்ள வேண்டும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். TVK-ன் 2-வது மாநாடு டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற மாநாடு போல் இருந்ததாகவும் விமர்சித்தார். மேலும், வரும் தேர்தலில் 3 சதவீத வாக்குகளை மட்டுமே தவெக பெறும் என்றும், மநீம., போல் விரைவில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எனவும் தெரிவித்தார்.
News August 23, 2025
1.5 கோடி தொண்டர்கள் பிரிந்துள்ளனர்: வைத்திலிங்கம்

EPS-க்கு 2 கோடி தொண்டர்கள் இருப்பதாக சொல்கிறார், ஆனால் 80 லட்சம் வாக்குகள் தான் அதிமுகவுக்கு கிடைத்ததாக OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். உண்மையான தொண்டர்கள் 1.5 கோடி பேர் பிரிந்துக் கிடப்பதாகவும், அவர்களில் 99 சதவீதம் பேர் அதிமுக இணைய வேண்டும் என நினைப்பதாகவும் கூறினார். மேலும், அதிமுக ஒன்றிணைந்த பின் கூட்டணி அமைந்தால் அந்த அணி தேர்தலில் வெற்றிப் பெறும் என்றார்.