News August 22, 2025
திண்டுக்கல்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இத SHARE பண்ணுங்க.
Similar News
News August 23, 2025
திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று (ஆகஸ்ட் 22) இரவு 11 மணி முதல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறை வெளியிட்ட தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
திண்டுக்கல்: ரூ.45,000 சம்பளத்தில் SUPERVISOR வேலை!

திண்டுக்கல் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனத்தில் உள்ள, 63 சீனியர் மற்றும் ஜூனியர் சூப்பர்வைசர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.45,000 முதல் ரூ.1,15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 22, 2025
அக்னி லிங்கேஸ்வரர் கோயிலில் அன்னதானம்

திண்டுக்கல்: மேட்டுப்பட்டி அடியனூத்து பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள அக்னி லிங்கேஸ்வரர் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. மேட்டுப்பட்டி அடியனூத்து பஞ்சாயத்தில் அக்னி லிங்கேஸ்வரர் கோயிலில் இன்று(ஆக.22) அம்மாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜையும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . இதில், அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.