News August 22, 2025
உதயநிதியால் முதல்வராக முடியாது: அமித்ஷா

CM ஸ்டாலினின் ஒரே லட்சியம் உதயநிதியை முதல்வராக்குவதுதான், ஆனால் ஒருநாளும் உதயநிதியை முதல்வராக்க முடியாது என அமித்ஷா விமர்சித்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய ஊழல் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுவரும் திமுக ஆட்சிதான் எனக் குறிப்பிட்ட அவர், டாஸ்மாக் ஊழல், போக்குவரத்து ஊழல் என குற்றச்சாட்டுகளை அடுக்கினார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் எனவும் அமித்ஷா கூறினார்.
Similar News
News March 24, 2026
நெருக்கடி.. கடந்த கால சிரமங்கள் மீண்டும் ஏற்படுமா?

போர் நெருக்கடியை கோவிட் போல எதிர்கொள்ள வேண்டும் என்ற PM மோடியின் கருத்து கவலையளிக்கிறது. இதனால், மீண்டும் கடினமான காலங்கள் ஏற்படுமா என்ற கேள்வி மக்களை வாட்டி வதைக்கிறது. போர் நீடித்து, வரும் நாட்களில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டால் என்னவாகும்? இறக்குமதி & ஏற்றுமதி தடைப்பட்டால் என்னவாகும்? இந்த தாக்கம் விலைவாசி, வேலைவாய்ப்புகளையும் பாதித்தால் நிலைமை என்னவாகும்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
News March 24, 2026
எரிசக்தி இறக்குமதியை விரிவுபடுத்தியுள்ளோம்: PM

நாட்டில் எரிசக்தி விநியோகம் சீராக இருப்பதாக PM மோடி தெரிவித்தார். இந்தியா தனது LPG தேவைகளில் கிட்டத்தட்ட 60%-ஐ இறக்குமதி செய்வதாகவும், கடந்த 11 ஆண்டுகளில் எரிசக்தி இறக்குமதியை 27 நாடுகளில் இருந்து 41 நாடுகளாக விரிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அவசர காலத்துக்கான பெட்ரோலிய இருப்பு 53 லட்சம் மெட்ரிக் டன் உள்ளதாகவும், அவற்றை 65 லட்சமாக விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
News March 24, 2026
தேர்தலில் கம்யூனிஸ்ட் கரைந்த கதை

1989 முதல் பெரும்பாலான சட்டப்பேரவை தேர்தல்களில் இரட்டை இலக்கத்தில் களம் கண்ட CPM, தற்போது தொடர்ந்து 2-வது முறையாக ஒற்றை இலக்கத்தில் போட்டியிடுகிறது. 1989-21( திமுக+), 1991-22(திமுக+), 1996-40(மதிமுக+), 2001-8(அதிமுக+), 2006-13(திமுக+), 2011-12(அதிமுக+), 2016-25( மக்கள் நலக்கூட்டணி), 2021-6(திமுக+), 2026-5(திமுக+). கடந்த தேர்தலை விட இம்முறை ஒரு சீட் குறைக்கப்பட்டது பற்றி உங்க கருத்து?


