News August 22, 2025
ட்ரோல்களுக்கு பதில் சொன்ன சூர்யா சேதுபதி

‘பீனிக்ஸ்’ பட ரிலீஸின்போது சூர்யா சேதுபதியின் சில செயல்பாடுகளால் ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய அவர், எல்லா இடங்களிலும் உள்ள எதிர்மறையான விஷயங்களை எப்படி கையாள்வது என்பதை கற்றுக்கொள்வதே முக்கியம் என கூறியுள்ளார். தன் படத்தில் தவறுகள் இருந்தால், அதனை அடுத்த முறை திருத்திக்கொள்வேன் என்ற அவர், இப்படி செய்துவிட்டேனே என்று துன்பப்படுவதில் நம்பிக்கை இல்லை என்றார்.
Similar News
News March 20, 2026
NDA-வா? அதிமுக கூட்டணியா? TTV தினகரன் விளக்கம்

தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைமை அதிமுகவா பாஜகவா என திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே, டெல்லி அனுமதியுடனே அதிமுக செயல்படுவதாக ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருக்கிறது என்று TTV தினகரன் கூறியுள்ளார். அதேநேரம், NDA கூட்டணி என்பது பாஜக தலைமையிலான கூட்டணி என்பதை CM-க்கு தெரியப்படுத்த விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
News March 20, 2026
19 சீசன்கள்.. IPL-ன் அசைக்க முடியாத 4 ஜாம்பவான்கள்!

2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட IPL-ன் அனைத்து சீசன்களிலும்(19 சீசன்கள்) 4 பேர் மட்டுமே விளையாடியுள்ளனர். தோனி(CSK, PWI), ரோஹித் சர்மா(MI, DCH), விராட் கோலி(RCB) ஆகியோருடன் இந்த லிஸ்ட்டில் மனிஷ் பாண்டேவும்(RCB, SRH, DC, PWI, MI, LSG, KKR) உள்ளார். இதில், அனைத்து சீசனிலும் ஒரே அணிக்காக விளையாடிய வீரராக விராட் கோலி மட்டுமே உள்ளார். ரஹானே, ஜடேஜா ஆகியோர் 18 சீசன்களில் விளையாடியுள்ளனர்.
News March 20, 2026
புதுச்சேரியில் தவெக கூட்டணி முடிவு மாறியது!

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தவெக தனித்து போட்டி என்ற முடிவை எடுத்துள்ளது. அங்கு, ஆளும் NR காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து தவெக 9 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இதனால், இன்று (அ) நாளை 30 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட உள்ளாராம்.


