News August 22, 2025

புதிய பல்நோக்கு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ

image

ஆலத்தூர் ஒன்றியம், புது விராலிப்பட்டி கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 22) பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு கட்டடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் அடிக்கல் நாட்டினார். இதில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வல்லபன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால், மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News March 8, 2026

பெரம்பலூர்: ஆட்சியர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நேற்று நடத்தப்பட்ட மகளிர் தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி பங்கேற்று கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு பெண் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

News March 7, 2026

பெரம்பலுர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

பெரம்பலுர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

பெரம்பலுர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே <<>>கிளிக் செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!