News August 22, 2025

கோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகினால் அபசகுணமா..?

image

கோயிலில் தேங்காய் உடைக்கும் போது, பூ வந்தால் நல்லது என்றும், கொப்பரையாக இருந்தால் குழந்தை பேறு உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், தேங்காய் அழுகி இருந்தால், அபசகுணம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் உண்மையில், உங்கள் குடும்பத்தை பிடித்திருந்த துர்சக்திகள், பீடைகள், கண் திருஷ்டிகள் நீங்கியதற்கான அறிகுறி என்ற ஆன்மிக விளக்கங்களும் உள்ளன. ஆகவே, மனம் சஞ்சலம் அடைய வேண்டாம். SHARE IT.

Similar News

News March 24, 2026

நாட்டு மக்கள் தயாராக இருங்கள்.. பிரதமர் மோடி

image

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றத்துக்கிடையே, எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு PM மோடி அழைப்பு விடுத்துள்ளார். ராஜ்யசபாவில் பேசிய அவர், போரின் தாக்கம் நீண்டகாலம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தைப் போல், இந்த நெருக்கடியான நிலையிலும் மாநில அரசுகள் ஒரு குழுவாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

News March 24, 2026

72 hour-க்கு முன் கேன்சல் செய்தால் தான் காசு கிடைக்கும்!

image

ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வதற்கான விதிகளில் IRCTC மாற்றம் செய்துள்ளது. அதன்படி, ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் கட்டணம் திருப்பி தரப்படாது; 8-24 மணி நேரத்துக்குள் கேன்சல் செய்தால் 50% பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. 72 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட்டை கேன்சல் செய்தால் மட்டுமே இனி முழு கட்டணமும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 24, 2026

BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

image

தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ₹2,720 குறைந்த நிலையில் மாலை ₹2,000 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் 1 கிராம் தங்கம் ₹12,750-க்கும், 1 சவரன் ₹1,06,000-க்கும் விற்பனையாகிறது. போர் நிறுத்த அறிவிப்பால் நேற்று ஒரே நாளில் 3 முறை மாறிய தங்கம் விலை மாலையில் உயர்ந்தது. பின்னர் இன்று காலை குறைந்த நிலையில், மீண்டும் உயர்ந்ததால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

error: Content is protected !!