News August 22, 2025
காஞ்சிபுரம் ஆட்சியர் புதிய அறிவிப்பு

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகள் தங்கள் நிறுவனங்களில் பெயர் மாற்றம் உரிமையாளர் பெயர் மாற்றும், பதிவு போன்றவை இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டும். இதற்கான ஆலோசனைக் முகாம் வரும் ஆக.23-ம் தேதி சிப்காட் மாம்பாக்கம் மற்றும் திருமுடிவாக்கத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News March 12, 2026
காஞ்சிபுரத்தில் சிலிண்டர் புக் செய்ய சிரமமா?

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News March 12, 2026
காஞ்சிபுரத்தில் ரூ.5,000 வேண்டுமா..?

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.
News March 12, 2026
காஞ்சிபுரத்தில் போலீஸ் துடிதுடித்து பலி!

தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமரேசன்(39). இவர், காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அரக்கோணம் சாலையில் காஞ்சிபுரம் நோக்கி பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பெரிய கரும்பூர் சந்திப்பு அருகே எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு பைக் மோதியதில் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


