News April 8, 2024
அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்

ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம் மோட்டூர் கிராமத்தில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெயபிரகாஷ்க்கு ஆதரித்து முன்னாள் அமைச்சர் வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி வாக்கு சேகரித்தார். கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ. அசோக்குமார், ஊத்தங்கரை எம்.எல்.ஏ. தமிழ்செல்வம், மற்றும் மாவட்ட, ஒன்றிய ,நகர, பேரூர் கழக செயலாளர்கள் கிளை கழக பொறுப்பாளர்கள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
Similar News
News October 15, 2025
கிருஷ்ணகிரி இளைஞர்களுக்கு உதவித்தொகை!

வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எவ்வித வேலைவாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 11. மேலும் www.tnvelaivaippu.gov.in இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
News October 15, 2025
கிருஷ்ணகிரியில் அக். 17-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டட 2-ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் அக். 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 14, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (அக். 14) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க