News August 22, 2025

நடிகைகள் பாலியல் புகார்.. MLA பதவி விலகல்?

image

கேரள நடிகைகள் பாலியல் புகார் அளித்த நிலையில், பாலக்காடு MLA ராகுல் மாங்கூட்டத்தில் பதவியை ராஜினாமா செய்ய கட்சி தலைமை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று, அவர் மாநில இளைஞர் காங்., தலைவர் பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், இன்று திருநங்கை ஒருவரும், MLA மீது பாலியல் புகார் அளித்துள்ளார். 2026-ல் தேர்தல் வரவுள்ள நிலையில், இவ்விவகாரம் காங்கிரஸுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News March 12, 2026

பிரபல இளம் நடிகர் ஹரி முரளி காலமானார்

image

‘ரசிகன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாள சினிமாவில் பிரபலமடைந்த நடிகர் ஹரி முரளி(27) தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ‘அண்ணன் தம்பி’, ‘பட்டணத்தில் பூதம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் VFX கலைஞராகவும் பணிபுரிந்து வந்தார். ஹரி முரளியின் திடீர் மரணம் மலையாள சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News March 12, 2026

மீண்டும் 100 டாலரை கடந்த கச்சா எண்ணெய்

image

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு $100ஐ தாண்டியுள்ளது. போர் தொடங்கிய பிறகு $120ஐ எட்டியிருந்த விலை, பதற்றம் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து சமீபத்தில் $89 ஆக குறைந்தது. கச்சா எண்ணெய் பேரல் $130 வரை அதிகரித்தாலும், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயராது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News March 12, 2026

சிலிண்டர் தட்டுப்பாடு.. கலெக்டர்களுடன் மீட்டிங்

image

சிலிண்டர் தட்டுபாடு எதிரொலியாக இன்று மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட வாரியாக சிலிண்டர் கையிருப்பு மற்றும் தேவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மாநிலம் முழுவதும் பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்ட நிலையில், வீட்டு கேஸ் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

error: Content is protected !!