News August 22, 2025
பீடிக்காக ஒரு கேமியோவா? ஆமிர் கான் விளக்கம்

‘பீடியை பற்ற வைக்கவா பாலிவுட்டில் இருந்து வந்தீர்கள்?’ என்ற கேள்வியை ‘கூலி’ படம் பார்த்த பலரும் ஆமிர் கானிடம் கேட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஆமிர் கான், கூலி படத்தில் ரஜினிக்கு பீடி பற்ற வைப்பதே தனது வேலை, இதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றார். மேலும், தான் ரஜினியின் தீவிர ரசிகர் என்ற அவர், அவருடன் இணைந்து நடிப்பது பெருமை என்றும் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News March 15, 2026
நடிகை த்ரிஷா பிரச்னை முடிவுக்கு வந்தது

<<19332195>> பார்த்திபன் – த்ரிஷா<<>> இடையே பிரச்னை உருவானது அனைவரும் அறிந்ததே. தற்போது, அவர்களுக்கு இடையேயான மோதல் முடிவுக்கு வந்திருப்பதாக SM-ல் பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், மும்பையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற த்ரிஷா, பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை பதிவிட்டிருப்பதுதான். இதனை பார்த்த நெட்டிசன்கள், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
News March 15, 2026
ஜனநாயகன் படக்குழு செய்தது தவறு: பவன் கல்யாண்

ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்னையில் NDA-வுக்கு தொடர்பில்லை என ஆந்திர DCM பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். சென்சார் விஷயத்தில் ஜனநாயகன் படக்குழு நீதிமன்றத்தை நாடியது தவறு என்றும், நீதிமன்றத்திற்கு செல்லாமல் இருந்திருந்தால் பிரச்னை முடிந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் CBI, CBFC போன்ற அமைப்புகளில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது எனவும் அவர் பேசியுள்ளார்.
News March 15, 2026
BIG BREAKING: அதிமுக கூட்டணியில் இணைகிறார்

நீண்ட இழுபறிக்கு பிறகு புதிய தமிழகம் கட்சி, அதிமுக கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் சற்றுநேரத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவிக்க உள்ளார். ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் கடந்த லோக்சபா தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி, தற்போது 5 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


