News April 8, 2024
புஷ்பா 3 படம் உறுதியானது

புஷ்பா 3 படம் எடுக்கப்பட இருப்பதை ஜெகபதி பாபு உறுதி செய்துள்ளார். புஷ்பா முதல் பாகம் வசூலை வாரி குவித்ததால், 2ஆம் பாகம் எடுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் புஷ்பா 3ஆம் பாக திரைப்படமும் எடுக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. அது உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில், தாம் அந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறி, ஜெகபதி பாபு உறுதி செய்துள்ளார்.
Similar News
News November 5, 2025
ஜென் Z இளைஞர்களுக்கு…. ராகுல் சொன்ன விஷயம்

ஹரியானாவில் வாக்குத் திருட்டு மூலம் காங்கிரஸின் வெற்றியை பாஜக பறித்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது ஒரு சதி என்ற அவர், இளைஞர்களும் ஜென் Z தலைமுறையினரும் இதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இது உங்களின் எதிர்காலம் பற்றியது. நாட்டின் ஜனநாயக நடைமுறையையும் தேர்தல் கமிஷனையும் 100% ஆதாரங்களுடன் கேள்வி கேட்கிறேன் என்றார்.
News November 5, 2025
வியக்க வைக்கும் இந்த உண்மை தெரியுமா?

சில விஷயங்களை யாராவது நமக்கு சொல்லும்போது தான், உண்மையாவா என ஆச்சரியத்துடன் கேட்போம். அப்படி ஆச்சரியங்கள் நிறைந்த சில தகவல்களை உங்களுக்காக மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பார்க்கவும். இந்த அரிய தகவல்களை மற்றவர்களுக்கும் SHARE செய்யலாமே.
News November 5, 2025
அதிமுகவில் இணைகிறாரா செங்கோட்டையன்?

தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்ட 250 பக்க கடிதத்தில் பல முக்கிய விஷயங்கள் இருக்கின்றன; அதை பொதுவெளியில் சொல்ல முடியாது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவில் இருந்து தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக புதிய தகவலை வெளியிட்ட அவர் , தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள்; நல்லதே நடக்கும் என்றும் சூசகமாக தெரிவித்துள்ளார்.


